கூத்தாநல்லூரில் நடைபெற்ற முப்பெரும் விழா

கூத்தாநல்லூரில் SDPI நடத்திய முப்பெரும் விழாவில் அனைத்து சமூக மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு; மாநில தலைவர் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் SDPI கட்சியின் சார்பில் 27.01.2018 அன்று மாலை 05 மணிக்கு சமூக ஒற்றுமை பொதுக்கூட்டம், அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி, மன்னர் பஹதூர்ஷாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெற்ற கட்டுரைப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியாக முப்பெரும் விழா மண்டல தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு அனைத்து சமூக மக்களுக்கான அவசர ஊர்தியை திருவாரூர் மாவட்ட SDPI கட்சியினரிடம் ஒப்படைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில தலைவி நஜ்மா பேகம், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தோழர் பெரியார் சரவணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த முப்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்ட தலைவர் லத்தீஃப், பொதுச்செயலாளர் ஷேக் தாவுது, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜ் முஹம்மது, செயலாளர் மர்ஜுக் அஹமது உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை