சென்னையில் எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு

தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது வழக்கமான அநாகரிக போக்கை கையாண்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய இறைத்தூதர் முகமது நபி (ஸல்) பற்றியும் தேவையில்லாமல் பேசி, அந்த விவகாரத்தை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை SDPI கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

இந்நிலையில், நாவடக்கமின்றி போகிறபோக்கில் சிறுபான்மை மக்களை சீண்டி, தொடர்ந்து அநாகரிக போக்கை கையாளும் எச்.ராஜாவை கண்டித்து, சென்னை மாவட்ட அட்சியர் அலுவலகம் அருகே SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசும், காவல்துறையும் எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, எச்.ராஜாவின் உருவ பொம்பையையும் எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை