ஆசிய அளவிலான யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

நெல்லை மாவட்டம் ரவணசமுத்திரம் பகுதியில் உள்ள குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா. இவர் அமெச்சூர் ஆசியன் யோகா விளையாட்டு ஃபெடரேசன் சார்பாக தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று விரைவில் இவ்வமைப்பின் மூலம் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேர்வாகி உள்ளார். மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா மற்றும் அவரது யோகா ஆசிரியர் கண்ணன் ஆகியோரை நேரில் அழைத்து SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில துணை தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட பொதுச் செயலாளர் S.S.A. கனி, மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, அம்பை தொகுதி தலைவர் கோட்டூர் M.K.பீர்மஸ்தான், பாளை தொகுதி துணை தலைவர் ஜெபா கடையம் பீர் முஹமது ஆகியோர் உடனிருந்தனர். மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா யோகாவில் உலக அளவில் மேலும் பல பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கும், அவரது சொந்த மண்ணான நெல்லை மாநகருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அதற்கு SDPI முழு ஒத்துழைப்பு வழங்கும் என மாநில துணை தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை