ஆலாத்தூரான்பட்டி இளைஞர் படுகொலைக்கு நீதி வேண்டி திண்டுக்கலில் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஆலத்துாரான்பட்டியில் நஜ்முதீன் (வயது 20) என்ற இளைஞர் முன் விரோதத்தின் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்களாள் 21.10.2017 அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்து சம்பந்தப்பட்டவர்களை பிடித்து சென்ற காவல்துறையினர் கொலையாளிகளை கொலை வழக்கில் கைது செய்யாமல் மாறாக கொலையாளியான மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் விரைவில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

காவல்துறையின் இந்த ஒருதலைபட்ச செயலை கண்டித்தும், கொலையாளிகளை கொலை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மாவட்ட செயலாளர் பவுசுல் ரகுமான் தலைமையில் சாலை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வத்தலக்குண்டு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் விரைவில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை