கீழக்கரை நகர் முழுவதும் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக 3வது வார்டு பெரிய காடு பட்டணியாப்பா தர்கா,மீனாட்சிபுரம், புது கிழக்கு தெரு முகமது காசிம் அப்பா தர்கா, புது கிழக்கு தெரு பள்ளம், கிழக்கு தெரு, பெத்ரி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கீழக்கரை நகர செயலாளர் அஸ்ரஃப் தலைமையில் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக நகராட்சி ஆணையர் வசந்தி, காவல்துறை துணை சார்பு ஆய்வாளர்கள் வசந்த் திரு.பூ.முத்து, சுகாதார ஆய்வாளர் தின்னாயிர மூர்த்தி, ஜும்மாபள்ளி ஜமாத் பொருளார் முஹம்மது சதக் தம்பி, கிழக்குத்தெரு துணை பொருளாளர் அஜிகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை