தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மக்கள் திரள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு நடைமுறையில் இருந்தும், தொடர்ச்சியாக நிலத்தடி நீரை சட்டவிரோதமாக தனியார் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லும் கொள்ளையர்களை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதனை தடுக்காமல் துணை போகும் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து SDPI கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

மக்கள் திரள் போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் தோழர்.சுப.உதயகுமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கினைப்பாளர் தோழர்.முகிலன், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.புதுக்குடி.M.S.ராஜா உள்ளிட்ட தலைவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மேலும் இப்போராட்டத்தில் SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஷ்ரஃப் அலி ஃபைஜி, பொதுச்செயலாளர் காயல்.சம்சுதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் பாசுல் சமீர், மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், விவசாய சங்கத்தலைவர் அலங்காரம், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன், நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பையா பாண்டியன், பா.ம.க. தூத்துக்குடி தெற்கு செயலாளர் கோ.லிங்கராஜ், மக்கள் தேசிய கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இசக்கிராஜா, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டியக்கம் பாத்திமா பாபு, மக்கள் கண்காணிப்பு மையம் இசக்கி முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை