ஏர்வாடியில் முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர SDPI கட்சியின் சார்பாக முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் ஷேக் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.மேலும் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முஹம்மது முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர்கள் முஹைதீன் அப்துல் காதர், அஹமது நவவி ஆகியோரும் உரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழ் உறுப்பினர் கே.கே.ஹபீப் ரஹ்மான் துவக்க உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னால் மாவட்ட துணைத்தலைவர் மோகன் குமார ராஜா, விடுதலை சிறுத்தை கட்சியின் தோழர் சுந்தர், முனைவர் ஜான் கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் ஏர்வை இம்ரான் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பெற்றது.

இக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாக்கவி தனது உரையில்; தமிழக அரசுக்கு முப்பெரும் கோரிக்கையுடன் பத்தாண்டுக்கு மேலாக சிறையில் வாடும் சிறுபான்மையினரான முஸ்லிம்களை விடுதலை செய்ய கோரியும், இந்தியா முழுவதும் மாட்டின் பெயரால் முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களை அடித்து கொல்வதை நிறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழக மாணவர்களுக்கான மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வதுடன் நீட் தேர்வை தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளித்திட வேண்டும் என்றும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு உரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் வலியுறுத்தி பேசினார்.

இறுதியாக முஹம்மது கனி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

பொதுக்கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஏர்வாடி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உறை கிணறு அமைத்து தரும்படி இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

நாங்குனேரி தொகுதிக்கு உட்பட்ட குளங்களையும் முறையாக தூர்வார வேண்டும் என்றும் இப்பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பிடு வழங்க வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுகொள்கிறோம்.

நீட் தேர்வை ரத்து செய்து தமிழகத்தில் நிரந்தர விலக்கு அளித்திட வேண்டும்

மாட்டின் பெயரால் சிறுபான்மையின முஸ்லிம்களை அடித்து கொல்வதை நிறுத்த வேண்டும்.

பாத்தாண்டுக்கு மேலாக சிறையில் வாழும் முஸ்லிம்கள் உட்பட சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை