மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் அரசின் பொதுமக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அரசின் விதிமுறைகளுக்கு முரணாகவும் தரங்கதாரா ரசாயண ஆலை(DCW) செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையை மூடக் கோரி SDPI கட்சி அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
பன்னாட்டு சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரியும், ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் உடணடியாக வழங்கிட வலியுறுத்தியும், குமரியின் இயற்கையை வளங்களை பாதுகாத்திடக்கோரியும் SDPI கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (25.04.2018) காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் சுல்ஃபிகர் அலி தலைமையில் குமரி மாவட்ட மக்களின் மாபெரும் வாழ்வுரிமை போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் SDPI கட்சியின் சார்பாக தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கான மூன்றாண்டு பதவிகாலம் நிறைவடைந்ததை அடுத்து கிளை முதல் தேசியம் வரையிலான உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. கிளை முதல் தொகுதி வரையிலான அடுத்த மூன்றாண்டுக்கான புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தற்போது மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கான மூன்றாண்டு பதவிகாலம் நிறைவடைந்ததை அடுத்து கிளை முதல் தேசியம் வரையிலான உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. கிளை முதல் தொகுதி வரையிலான அடுத்த மூன்றாண்டுக்கான புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தற்போது மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
வேலூர் மாநகராட்சி 56வது வார்டு கொணவட்டம் பகுதியில் அமைந்துள்ள மதீனா நகர் சுற்று வட்டாரத்தில் பல ஆயிரம் வீடுகள் அமைந்துள்ள நிலையில் பல ஆண்டுகளாக குடிதண்ணீர் குழாய் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டுவந்தனர்.
நீயுஸ் எக்ஸ் ஆங்கில தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று(ஏப்ரல்.20) அன்று கலந்து கொண்டார். அதில் "தமிழர்கள் பொய்யர்கள், பிரிவினைவாதிகள், நடிப்பவர்கள் என்று மிகவும் கொச்சைபடுத்தி அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மார்வாடிகளை விட்டும் பேச வைத்திருக்கிறார். அந்த தொலைகாட்சியின் தொகுப்பாளர். ஆனால் இதற்கு மறுப்பு சொல்ல திருமுருகன் காந்திக்கு வாய்ப்பு கொடுக்காததோடு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேசநேரமே கொடுக்காமல் தமிழின விரோதத்தோடு நியூஸ் எக்ஸ் ஆங்கில தொலைகாட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து இரவு திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே17 இயக்க தோழர்கள் தொலைகாட்சி வாயில் முன் தமிழர்களை இழிவுபடுத்திய நிகழ்ச்சி நெறியாளர் பகிரங்கமாக தொலைகாட்சியில் தமிழர்கள் இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தோழர் திருமுகன் காந்தியுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சி தோழர்கள், மே பதினேழு இயக்க தோழர்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தோழமை அமைப்புகளின் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் 127வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் சானாவாஷ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் நதி நீர் பாராளுமன்ற அமைப்பு சார்பில் 17.04.2018 அன்று பாபநாசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் SDPI கட்சியின் நெல்லை ஏர்வாடி நகர தலைவர் மர்ஹபா சேக் முஹம்மது, மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது மற்றும் தொகுதி செயற்குழு உறுப்பினர் சலீம் ஆகியோர் கலந்து கொண்டு தாமிரபரணி மீட்பு களத்தில் தேவையான உதவிகளை மேற்கொள்வோம் என உறுதி அளித்தனர்.
தலித்கள் மீதான தொடர் தாக்குதல்கள், கிறிஸ்தவ ஆலயங்களுக்கான தடை, ஜெபக்கூட்டங்களுக்கான தடை, புனித நூல் எரிப்பு ஆகிய வன்முறை வெறியாட்டங்களை நடத்தும் பாஸிச பயங்கரவாத கும்பலை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் களியக்காவிளையில் கடந்த 12.04.2018 வியாழன் அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் குமரி மாவட்ட தலைவர் சுல்ஃபீகர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்திய குடியரசு கட்சியின் சார்பில் 14.04.2018 சனிக்கிழமை அன்று நெல்லை கிழக்கு மாவட்டம் ஏர்வாடியில் டாக்டர் பாபா ஷாஹேப் அம்பேத்கர் அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்யில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் நாங்குனேரி தொகுதி தலைவர் இஞ்சினியர் இம்ரான் அலி, நகர செயலாளர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை