சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஐ.நா.அலுவலகம் முற்றுகை போராட்டம் - எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு

சிரியாவில் நடைபெறும் மனிதப்படு கொலையைக் கண்டித்து இன்று(06.03.2018) காலை 11.00 மணிக்கு, தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் அடையாறில் உள்ள யுனிசெப் (ஐ.நா) அலுவலகம், அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி, இந்திய தேசிய லீக் கட்சி பொதுச்செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன், சமுதாய தலைவர் அப்பல்லோ ஹனீஃபா உள்ளிட்ட தோழமை கட்சிகளும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஃபாரூக், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சலீம், பொதுச்செயலாளர் அன்சாரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், பொதுச்செயலாளர் யாசர் அரஃபாத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் யுனிசெஃப், அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

 

ஈரான் மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற பஷார் அல் அசாத் படைகளால் சிரியாவில் குழந்தைகளும் பொது மக்களும் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு வருவதை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும், இந்திய அரசும் தலையிட்டு தடுத்து நிறுத்தவும், மனித படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பாத ஐ.நா.வை கண்டித்தும்

டெல்லியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை SDPI கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில் SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் வழக்கறிஞர் அஹமது சர்ஃபுத்தீன், தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷாஃபி, Dr. தஸ்னீம் ரஹ்மானி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் டெல்லி மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஆலத்துாரான்பட்டியில் நஜ்முதீன் (வயது 20) என்ற இளைஞர் முன் விரோதத்தின் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்களாள் 21.10.2017 அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்து சம்பந்தப்பட்டவர்களை பிடித்து சென்ற காவல்துறையினர் கொலையாளிகளை கொலை வழக்கில் கைது செய்யாமல் மாறாக கொலையாளியான மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் விரைவில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

மதுரையில் இன்று (22/10/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது;

மெர்சல் திரைப்படத்தில் பதிவிடப்படுள்ள காட்சிகள் அனைத்தும் மக்களின் உணர்வுகளுக்கு பிரதிபலித்து, அரசு செய்யும் தவறுகளை ஜனநாயக முறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது போன்ற நல்ல கருத்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து வரவேற்கும்;

மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவலங்கள்குறித்த கருத்துக்களை பதிவு செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையினரை மிரட்டுவதையும், படத்தின் காட்சிகளை நீக்க வலியுறுத்துவதையும் திரைப்படத் துறையினருக்கும்,கலைஞனுக்கும் இருக்கும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.இதனை எஸ்.டி.பி.ஐ. வன்மையாக கண்டிக்கிறது.

மெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ள காட்சிகளில் சில கூடுதல் குறைவுகள் இருக்கலாமே தவிர அது உண்மையாக மக்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பே ஆகும். ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்த பிறகு மக்கள் பெறும் கொதி நிலையில் இருக்கிறார்கள் அந்த கொதி நிலைதான் இப்படித்தில் காட்சியாக்கப்பட்டதற்கு மக்களின் தரப்பில் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. பாரதிய ஜனதாவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சியில் இருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் சிலிண்டர் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விபத்தில் பலியான 70-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமைகள் அரசால் ஏற்பட்டது என்பதை படத்தில் காட்சியாக வடிவமைப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஜிஎஸ்டி வரி விதிப்பு நல்ல திட்டம் என சொல்ல அரசுக்கு உரிமை இருக்கிறது என்றால், அந்த திட்டம் நாட்டிற்கு மிக ஆபத்தானது என்பதை சொல்ல மக்களுக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஊடகங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இக்கருத்துக்களை ஜனநாயக தண்மையுடன் எடுத்துக்கொள்ளாமல் அதற்கு மாற்றமாக பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன் இப்படி கருத்து கூறுபவர்களுக்கு என்ன துணிச்சல் இருக்கிறது என்று மிரட்டுகிறார் மறு பக்கம் எச்.ராஜா நடிகர் விஜயை கிருஸ்தவராக சித்தரிக்க முயலுகிறார்.

மோடி அரசை விமர்சிப்பது இந்துக்களை விமர்சிப்பதை போன்று பேசி வரும் பாஜக தலைவர்களின் கருத்துக்கள் கடுமையான கண்டனத்திற்குரியவை. இந்த விமர்சனத்தை இந்துக்களுக்கு எதிரான விமர்சனம் என்று சொல்வது திசை திருப்பும் செயலாகும். இந்த விமர்சனம் இந்துக்களுக்கு எதிரானது அல்ல, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனம் ஆகும். அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கும் சுதந்திரமாகும், இதற்கு திரைப்பட கலைஞர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.

மெர்சல் திரைப்படத்தில் தவறான, பொய்யை உமிழக்கூடிய அல்லது சமூகத்தின் மீதான பிளவுகளை உருவாக்கும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை மாறாக விழிப்புணர்வூட்டும் கருத்துக்களையும்,அரசினுடைய தவறான செயல்பாடுகளை விமர்சிக்கும் கருத்தாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துக்களை ஒரு கலைஞனாக திரைப்படத்தில் பதிவு செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் இது போன்ற நல்ல கருத்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. அதே போன்று இந்த கருத்துக்களுக்காக நடிகர் விஜய் உள்ளிட்ட மெர்சல் திரைப்பட படக்குழுவினரை மிரட்டும் பாரதிய ஜனதா கட்சியினரை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ந்து பா.ஜ.க.வின் தலைவர்கள் கருத்துறிமைக்கு எதிராகவும், சமூக ஒற்றுமைக்கு எதிரான மிரட்டல் மற்றும் வன்முறை போக்கை கையாண்டு வருகிறார்கள். மோடி அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யும் பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்கள். இது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல என்பதை நாங்கள் எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். தனிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள மெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ள காட்சிகளை சில அரசியல் காரணங்களுக்காக மெர்சல் திரைப்படகுழுவினர் அக்காட்சிகளை நீக்கக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கிறேன். ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்ப்பது என்பது சர்வாதிகார ஃபாசிச போக்காகும். சர்வாதிகாரமான ஃபாசிசத்தோடு செயல்படக்கூடாது என்று பாஜக தலைவர்களை நாங்கள் எச்சரிக்கிறோம்.

அதுமட்டுமின்றி விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கி படப்பிரச்சினைகளை மெர்சல் திரைப்படத்துடன் முடிச்சிப்போடும் செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது. விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கி திரைப்படங்களில் ஒரு சமூகத்தினரை தீவிரவாதிகளாக சித்தரித்த செயலைதான் இஸ்லாமியர்கள் எதிர்த்தார்கள். அதோடு முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் திருக்குர்-ஆனுடைய வசனங்களை இப்படித்தில் தவறாக சித்தரித்தார்கள். இக்காரணங்களுக்காகத்தான் இஸ்லாமியர்கள் இப்படங்களை எதிர்த்தார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றல்ல. மெர்சல் திரைப்படத்தில் வெளியிடப்படுள்ள காட்சிகள் அனைத்தும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் காட்சிகள்தான். எனவே, இந்த இரண்டு பிரச்சினைகளையும் முடிச்சிப்போடும் செயல் என்பது தவறானதாகும். இதனை ஒரு போதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஏற்றுக்கொள்ளாது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்;

அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மருத்துவ முகாம்கள், நிலவேம்பு குடிநீர்வழங்கும் முகாம்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் கிளைகள் தோறும் முன்னெடுத்து வருகிறார்கள். டெங்குவின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு பணிகளை இன்னும் அதிகமாக நடத்திட கட்சியின் தொண்டர்களுக்கு அறிவிறுத்தி இருக்கிறோம். டெங்கு காய்ச்சலை குணப்படுத்த அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை போன்று பொதுமக்களும் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள எஸ்.டி.பி.ஐ. பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது;

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகளில் சுமார் நூறு தொகுதிகளை தேர்ந்தெடுத்து அந்த நூறு தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுவதற்கு தகுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் அடிப்படையில் கட்சியின் உறுப்பினர்களை அதிகரிப்பது, கட்சியின் கொள்கைகளை பரவலாக்குவது, அதன் மூலம் பலப்படுத்துவது போன்ற செயல்களை முன்னெடுத்துள்ளோம்.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் அளவிற்கு எஸ்.டி.பி.ஐ. தயாராக இருக்கிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலையும் எதிர் கொள்ளும் அளவிற்கு கட்சியின் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நூறு தொகுதிகளில் அதற்குரிய பணிகளை வீரியமாக்கி உள்ளோம். எப்போது உள்ளாட்சி மற்றும்சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதனை சந்திப்பதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தயாராக இருக்கிறது.

தமிழக அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்;

தமிழக அரசு மற்றும் ஆட்சியாளர்களை பொறுத்தவரை மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் ஆட்சியை காப்பாற்றுவதற்காக மத்திய அரசுக்கு கும்பிடுப்போடும் செயல்களிலேயே மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அரசும், அமைச்சர்களும் மாவட்டம் தோறும் சென்று அரசு செலவில் கோடிக்கணக்கான ரூபாயில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தும் செயல்களிலும், அதற்கு பந்தல் நடுவதிலும், அதனை ஏற்பாடு செய்வதிலுமே தங்களது நேரத்தை போக்கி வருகின்றனர். மாறாக மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் சில நேரங்களில் சில அமைச்சர்கள் பேசி வரும் பேச்சுக்கள் தமிழக அரசியலில் புரியாத புதிராகவும், மக்கள் மன்றத்தில் அப்பேச்சுக்கள் கேலிப்பொருளாகவும், ஊடகத்தில் காட்சி பொருளாகவும் மாறிவருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ”எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார்” என்று மோடியிடம் சரணடைவது போன்று அவர் பேசி இருப்பது அதிமுக அமைச்சர்களின் மனநிலையை அவர் பிரதிபலித்தது போன்று அமைந்திருக்கிறது.

அதிமுகவை பல கூறுகளாக பிரித்து அக்கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தை முடக்கி தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிக்கும் செயல்திட்டங்களை ஏற்படுத்தி உள்ள பாஜகவினர்களை எதிர்க்கும் நிலையில் இல்லாத ஒரு திராணி அற்ற அரசாக அதிமுக அரசு செயல்பட்டுவருகிறது. இதற்கு மாறாக அதிமுக அமைச்சர்கள் எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார் என்று பேசி வருவதை அதிமுக தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், தமிழக மக்களும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

பேரிடர்களை எதிர்கொள்ளும் அளவிற்கு தமிழக அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்;

வடகிழக்கு பருவமழை நெருங்கி வருகிறது. அதற்கான காலங்கள் துவங்க இருக்கும் இந்நிலையில் அதற்கான தடுப்பு பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிக வேகமாக தமிழக அரசு துரிதப்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் தொடர்ந்து பேரிடர்கள் சென்னை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களை பெரிதும் பாதித்திருக்கிறது என்று தமிழக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆலத்தூரன்பட்டி இளைஞர் படுகொலையில் காவல்துறையினரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஆலத்துாரான்பட்டியில்நஜ்முதீன் (வயது 20) என்ற இளைஞர் முன் விரோதத்தின் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்களாள் நேற்று (21.10.2017) படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்து சம்பந்தப்பட்டவர்களை பிடித்து சென்ற காவல்துறையினர் கொலை வழக்கில் கைது செய்யாமல் மாறாக மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள்விரைவில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதை அறிகிறோம். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையின் உயர் அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கொலை வழக்கில் வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்திட வேண்டும். கொலை செய்யப்பட்டவருடைய குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இப்பேட்டியின் போது மதுரை மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான், பொதுச்செயலாளர் பிலால்தீன், செயலாளர்கள் கமால் பாஷா, சிக்கந்தர், சாகுல், துணைத் தலைவர் சீமான் சிக்கந்தர், பொருளாளர் சுப்ரமணியம், ஊடக பொறுப்பாளர் சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

காந்தியை கொன்றோரே கௌரியை கொன்றார்கள் எனும் முழக்கத்தோடு காந்தி ஜெயந்தி அன்று சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு அருகாமையில் ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் மற்றும் தோழமை கட்சிகள் மற்றும் மாணவ அமைப்புகள் ஒருங்கிணைத்த பாசிசத்திற்கு எதிராக குரல் எழுப்பும் எழுச்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் SDPI கட்சியின் சார்பில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஏ.கே.கரீம், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் சேக் முஹம்மது அன்சாரி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, தந்தை பெரியார் திராவிட கழகம், இளந்தமிழகம், கேம்பஸ் ஃபர்ண்ட் உட்பட பல்வேறு முற்போக்கு பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். காவல்துறையின் தடையை மீறி இக்கூட்டம் நடைபெற்றதால் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை தமிழகத்தில் முழுமையாக ரத்து செய்யவேண்டும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும் மாநில அரசும் முழு பொறுப்பேற்க வேண்டும், நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் SDPI கட்சியின் மதுரை வடக்கு தெற்கு தொகுதி சார்பில் வடக்கு தொகுதி தலைவர் சிக்கந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையை ஐ.நா. மற்றும் உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், ரோஹிங்கியர்களுக்கு இந்தியா அபயம் அளிக்கக் கோரியும், மியான்மர் மீது உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக இன்று (செப்.15), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்கிட கோரியும் கோவை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் (மகளிர் அமைப்பு) சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கண்டன முழக்கமிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தனர்.

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து SDPI கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஓசூரில் ஊடக ஒருங்கிணைப்பாளர் சபீர் அஹமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சானாவாஸ், கர்நாடக மாநில பெங்களூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மௌலானா சஃபியுல்லா, குரேஜ் பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் முஹம்மது கலீல் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்கிட கோரியும் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் வழக்கறிஞர். ரஜினிகாந்த் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் மாபெரும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

Page 1 of 2

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை