கூத்தாநல்லூரில் SDPI நடத்திய முப்பெரும் விழாவில் அனைத்து சமூக மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு; மாநில தலைவர் பங்கேற்பு

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சியின் மகளிர் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பகுதி கிளை சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆசாத் நகர், குத்பாபள்ளி, 13 மற்றும் 15வது வார்டுகள், பட்டுக்கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அல்லாமல் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டும், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கவும் முத்துப்பேட்டை நகர SDPI கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆசாத் நகர் பாட்ஷா தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மனிவழகனை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. இம்மனு குறித்து துரிதமான நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதியளித்தார்.

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் SDPI கட்சி புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லத்தீப் அவர்கள் புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். முன்னதாக கிளை செயலாளர் முஹம்மது உசேன் வரவேற்புரை ஆற்றினர்.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி தஞ்சை தெற்கு மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக் தலைமையில் நடைபெற்றது.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் SDPI கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெற்றது.

‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் மாபெரும் மக்கள் திரள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் 19.08.2017 சனிக்கிழமை அன்று மன்னார்குடியில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! வலியுடன் இரத்தம் வழியும் இந்தியா மாபெரும் மக்கள் பரப்புரையின் பெண்கள் கருத்தரங்கம் கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட தலைவி நஸிமா பானு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விம் அமைப்பின் மாவட்ட செயலாளர் பெளஜிகா பேகம் கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவர்களையும் வரவேற்றார்.

நாட்டின் 71வது சுதந்திரதின கொண்டாட்டம் நாடு முழுவதும் SDPI கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, கடலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, விழுப்புரம், நாமக்கல், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, காரைக்கால், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.

Page 1 of 2

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை