தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகரம் சார்பாக நகர தலைவர் T.J.மாப்பிள்ளை தம்பி தலைமையில் மார்க்கெட் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரம் சார்பாக நகர செயலாளர் I.ஜாஹிர் உசேன் தலைமையில் தெருக்களில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் செய்து, அவர்கள் வீட்டில் டெங்கு பரப்பக்கூடிய தண்ணீர் தேங்கி கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிப்பது, வீடுகள் சுற்றிலும் கொசு மருந்துகள் அடிப்பது மற்றும் தண்ணீர் தேங்கி கிடக்கும் இடங்களிலும் மற்றும் கொசு உருவாகும் இடங்களிலும் கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மற்றும் SDPI கட்சி இணைந்து டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட தலைவி நசீமா பானு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது மைதீன், SDTU தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் சேக் தாவுது உள்ளிட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகர SDPI கட்சி சார்பாக இன்று (20.09.2017) காலை 9.30 மணிக்கு மதுக்கூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மதுக்கூர் நகர தலைவர் TJ.மாப்பிளை தம்பி தலைமை நடைபெற்றது.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி தஞ்சை தெற்கு மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக் தலைமையில் நடைபெற்றது.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் SDPI கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகர SDPI கட்சி சார்பாக பரவி வரும் டெங்கு காய்சலை குணப்படுத்தும் நிலவேம்பு கசாயம் மதுக்கூர் மெலானா தோப்பு, சந்தை பேட்டை பள்ளி, இடையகாடு பள்ளி (ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள்) ஆகிய இடங்களில் விநியோகிக்கப்பட்டது.

தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிஜா தலைமையில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நஸ்ரத் பானு மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட விம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசம் தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அடித்துக் கொல்லும் செயலை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! வலியுடன் இரத்தம் வழியும் இந்தியா மாபெரும் மக்கள் பரப்புரையின் பெண்கள் கருத்தரங்கம் கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட தலைவி நஸிமா பானு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விம் அமைப்பின் மாவட்ட செயலாளர் பெளஜிகா பேகம் கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவர்களையும் வரவேற்றார்.

Page 1 of 2

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை