மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்கிட கோரியும் கோவை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் (மகளிர் அமைப்பு) சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கண்டன முழக்கமிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தனர்.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி கோவை மாவட்டம் குனியமுத்தூரில் SDPI கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் கோவை மண்டல தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி கோவை மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் இரயில் மறியல் போராட்டம் சிங்காநல்லூர், குனியமுத்தூர், போத்தனூர், கோவை மாநகராட்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இந்தியாவை அடித்துக் கொல்லாதே பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று மேட்டுப்பாளையத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் நிஜாம் முகைதீன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

கோவை குறிச்சிப்பிரிவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  200க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர் 10 வகுப்பறைகளை கொண்ட இப்பள்ளி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்ததால் இடித்து விட்டு மீண்டும் புதிய கட்டிடம் கட்டித்தருவதாக கூறி 8 வகுப்பறைகள் இடிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணிகள் இன்னும் முழுமை பெறாத காரணத்தினால் மீதமுள்ள இரண்டு வகுப்பறைகளில் அனைத்து குழந்தைகளும் மிகவும் நெருக்கடியான நிலையில் பாடம் கற்பித்து வருகிறார்கள். மேலும் இப்பள்ளியில் சத்துணவு வசதி, சுற்றுச்சுவர், ஜன்னல் கதவுகள் உடைந்த நிலை கழிப்பிட வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக குழந்தைகள் சிறுநீர் கழிக்க அவரவர் வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவலமான சூழல் ஏற்பட்டுவருகிறது.

SDPI கட்சி நடத்தும்‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ மாபெரும் மக்கள் பரப்புரையின் ஒருபகுதியாக, கோவையில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. கோவை ஆத்துப்பாலத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.

71வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட விமன் இந்தியா மூவ்மென்ட் WIM சார்பாக பரவிவரும் விசக்காய்ச்சலை தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் WIM மகளிர் அமைப்பின் மாநில செயலாளர் பர்சானா, கோவை மாவட்ட தலைவர் ஃபரிதா, துணை தலைவர் மைமூனா, பொருளாளர் சிராஜ் நிஷா, மாவட்ட கமிட்டி உறுப்பினர் ஃபாரிஷா SDPI கட்சியின் கோவை மண்டல தலைவர் முஸ்தபா, சிங்கை தொகுதி தலைவர் அணீஃபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் சிட்டி மீட்டர் ஆட்டோ சங்கத்தின் சார்பாக 71வது (15-08-2017) சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் 71வது சுதந்திரதின கொண்டாட்டம் நாடு முழுவதும் SDPI கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, கடலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, விழுப்புரம், நாமக்கல், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, காரைக்கால், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.

SDPI கட்சியின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 06-08-17 இன்று SDPI கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் கோவை சங்கனூர் ரோடு கண்னப்பா நகர் C.R.B.M மஹாலில் நடைபெற்றுது.

Page 1 of 2

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை