முத்தலாக் சட்ட மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது!
முஸ்லிம் பெண்கள் நலனுக்கு முற்றிலும் புறம்பானது! - விமன் இந்தியா மூவ்மெண்ட் கண்டனம்!

புதுவையில் பள்ளிவாசலை சேதப்படுத்திய ஃபாசிசவாதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;

1992ம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஒட்டுமொத்த உலகமே விழித்திருந்த நேரத்தில், முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் சங்கபரிவார சக்திகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தரைமட்டமாக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல.தேசத்தின் ஜனநாயகமும்,வழிபாட்டு உரிமையும்,மதசார்பின்மையும்,சிறுபான்மையினரின் நலன்களும் பாதுகாப்பும் சேர்ந்தே இடிக்கப்பட்டுள்ளது.

பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும், இடித்த குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும், உச்ச நீதி மன்றம் சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாமான தீர்ப்பு வழங்க வேண்டும், நீதிக்காக தேசத்தின் அபிமானிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று (டிச. 06) நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னை, சேப்பாக்கத்தில் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி தலைமையில் நடைபெற்ற நீதிக்கான ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவாரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி கூறியதாவது;

உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை பெற்றுத்தத்தந்த பாபரி மஸ்ஜித் இடிப்பு நடைபெற்று இன்றோடு 25 ஆண்டுகாலம் கடந்துவிட்டது. இருந்தும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றவாளிகளாக நீதிபதி லிபர்ஹான் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சட்டப்படி தண்டிக்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் மஸ்ஜித் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்த அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில்“இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை மிக்க ,சோசலிஷ ,மதசார்பற்ற ,ஜனநாயக, குடியரசாக கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளோம்.” பாபரி பள்ளி இடிப்பு என்பது அரசியல் சாசன முகப்புரையில் கூறப்பட்டுள்ள அத்தனை அம்சங்களையும் தகர்த்த செயலாகும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் பல்வேறு அதிகாரம் மிகுந்த பதவிகளில் அமர்ந்திருப்பது மாபெரும் அநீதி, நாட்டிற்கே இது அவமானம்.

இத்தனை ஆண்டுகளாக முஸ்லிம் சமூகமும்,தேசத்தின் நல விரும்பிகளும் ஒருமித்த குரலில் பாபரி மஸ்ஜித்தின் நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்த முக்கிய கட்டத்தில், சங் பரிவார அமைப்புகள் தங்களின் முகவர்களை மத்தியஸ்தர்களாக கொண்டு வந்து, முஸ்லிம் சமூகத்தில் விலைபோனவர்களை தங்கள் பக்கம் இழுத்து, குழப்பங்களை ஏற்படுத்தி நீதித்துறையை புறந்தள்ள முயற்சி செய்து வருகின்றனர். சங்பரிவார்களின் இந்த செயல் திட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்கள் நீதித்துறையின் இறுதித் தீர்ப்பிற்காக காத்திருக்கும் இந்த சூழலில் எந்த சமரச முயற்சிகளையும் முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள். நீதிக்காக முஸ்லிம்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்ட தகர்ப்பாகும். அதனை மீண்டும் கட்டுவதுதான் தேசத்தின் உயிர்ப்பாகும். பாபர் பள்ளியை மீண்டும் கட்ட வேண்டும், இடித்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இப்போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, பொதுச்செயலாளர் ஹுசைன், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சலீம், பொதுச்செயலாளர் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொதுச்செயலாளர் புஸ்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நீதிக்கான கண்டன முழக்கமிட்டனர்.

தமிழக வேலைவாய்ப்புகளை வடநாட்டினருக்கு தாரை வார்க்கும் அறிவுப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு தேர்வாணையத்தை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டிச.02 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தமிழ்நாடு தேர்வாணையத்தின் துரோக செயலை விவரித்து உரையாற்றினார்.

காந்தியை கொன்றோரே கௌரியை கொன்றார்கள் எனும் முழக்கத்தோடு காந்தி ஜெயந்தி அன்று சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு அருகாமையில் ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் மற்றும் தோழமை கட்சிகள் மற்றும் மாணவ அமைப்புகள் ஒருங்கிணைத்த பாசிசத்திற்கு எதிராக குரல் எழுப்பும் எழுச்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் SDPI கட்சியின் சார்பில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஏ.கே.கரீம், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் சேக் முஹம்மது அன்சாரி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, தந்தை பெரியார் திராவிட கழகம், இளந்தமிழகம், கேம்பஸ் ஃபர்ண்ட் உட்பட பல்வேறு முற்போக்கு பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். காவல்துறையின் தடையை மீறி இக்கூட்டம் நடைபெற்றதால் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய பா.ஜ.க தொடர் மக்கள் விரோத போக்கை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் 23.09.2017 சனிக்கிழமை மாலை 5:00 மணியளவில் நெல்லை மாவட்டம் பாளை ஜவஹர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையை உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இந்தியா அபயம் அளிக்கவும், மியான்மர் மீது உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளந்தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையை உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இந்தியா அபயம் அளிக்கவும், மியான்மர் மீது உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேசம் முழுவதும் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பை தொகுதி வீரவநல்லூரில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையை உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இந்தியா அபயம் அளிக்கவும், மியான்மர் மீது உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேசம் முழுவதும் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Page 1 of 6

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை