முத்தலாக் விவகாரம்; டெல்லி பாராளுமன்ற வீதியில் விம் கண்டன பேரணி

முத்தலாக் சட்ட மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது!
முஸ்லிம் பெண்கள் நலனுக்கு முற்றிலும் புறம்பானது! - விமன் இந்தியா மூவ்மெண்ட் கண்டனம்!

டெல்லி பாராளுமன்ற வீதியில் கண்டன பேரணி-ஆர்ப்பாட்டம்

மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் முத்தலாக் சட்ட மசோதா, அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மேலும் முஸ்லிம் பெண்களின் நலனுக்கு முற்றிலும் புறம்பானது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் (விம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் சட்டவிரோத முத்தலாக் மசோதாவை எதிர்த்து விம் அமைப்பினர் புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற வீதியில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்லியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு டெல்லி மாநில நிர்வாகி ஷாகின் கௌசர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் தேசிய தலைவி யாஸ்மின் ஃபரூக்கி; மத்திய பா.ஜ.க. அரசு முத்தலாக் தடை மசோதாவை, மக்களவையில் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது. திருமண சிவில் ஒப்பந்தத்தை குற்றத்தன்மை உள்ளதாக மாற்றி இருப்பது, இந்திய சட்டங்கள் வழங்கும் உரிமைகளை மீறுவதாகும்.

                         

இந்த மசோதாவின் பின்னால் மத்திய அரசு கொண்டிருக்கும் நோக்கம்; முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதோ அல்லது மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களை பாதுகாப்பதோ அல்ல. மாறாக, மத்திய அரசின் அரசியல் நோக்கங்களை திணிப்பதற்காகவே அது அமைந்துள்ளது. எனவே, இப்படிப்பட்ட தீய எண்ணம் கொண்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி இருப்பதற்கு விம் அமைப்பு தனது வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

முத்தலாக் தடை என்ற பெயரில், மத்திய அரசு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி, வாக்கு வங்கிகளுக்காக சமூக உணர்வுகளை ஒருமுகமாக்க முயன்றிருக்கிறார்கள். ஏதோ முத்தலாக்கால் பெண் சமூகம் வேதனையால் துடிப்பது போன்ற ஒரு போலியான சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மசோதா மூலம், முத்தலாக்கை ஒரு குற்ற நடவடிக்கையாக்கி, ஜாமீனில் வெளிவர முடியாத கடும் குற்றமாக்கி, மூன்றாண்டுகள் சிறையில் அடைத்து அபராதம் விதிப்பதன் மூலம், முஸ்லிம் பெண்களையும், ஆண்களையும் அரசு கொடுமைப்படுத்தவே இந்த மசோதா விதிகள் பயன்படும்.

கொலைகாரர்கள், அடித்துக் கொல்பவர்கள் மற்றும் கலவரம் செய்பவர்கள் எல்லாம் இலகுவாக பிணையில் வெளிவரும் போது, முத்தலாக் கூறும் முஸ்லிம் ஆண்களை சிறையில் அடைக்கத் துடிப்பது ஆச்சரியம்! அளிக்கிறது. 
முஸ்லிம்களின் விவாகரத்து எண்ணிக்கையை, மற்ற சமுதாயத்தினரின் விவாகரத்து எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு. மதம், பிராந்தியம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒதுக்கப்பட்டு, அபலைகளாக்கப்பட்ட மொத்த பெண் சமுதாயம் குறித்து இந்த அரசுக்கு அக்கறை இல்லை. என அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முத்தலாக் மசோதாவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், அதை மாநிலங்களவையில் முறியடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை