நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட விம் பாராட்டுக்கள்

விமன் இந்தியா மூமன்ட் (WIM) நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையில் மேலப்பாளயத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் பாத்திமா கனி மற்றும் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது அப்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;

ஆகஸ்ட் 15 சுதந்திர தினதன்று சுந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவது, வருகிற செப்டம்பர் மாதம் விமன் இந்தியா மூவ்மெண்டில் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவது, SDPI கட்சி சார்பாக தேசிய அளவில் ஆகஸ்ட் 1 முதல் 25 வரை நடைபெறும் இந்தியாவை அடித்து கொல்லாதே! வலியுடன் இரத்தம் வழியும் இந்தியா என்ற மக்கள் பிரச்சாரத்தின் விழிப்புணர்வூட்டும் பேரணியில் WIM சார்பாக பெண்கள் திரளாக கலந்து கொள்வது, ஹாமிம்புரம் பகுதியில் ஏற்பட்ட சுகாதார சீர்கேடுகளை WIMன் புகாரை ஏற்று உடனே சரி செய்த மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்து கொள்வது, ஏழை எளிய மக்களின் நலனை கருதி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆரம்பித்துள்ள அன்பு சுவருக்கு பாராட்டுகளை தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை