ஜிஎஸ்டி பெரும் முதலாளிகளை வாழவைக்கிறது. விம் குற்றச்சாட்டு

SDPI கட்சியின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மகளிர் அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மதுரையில் WIM அமைப்பின் மாநில தலைவி நஜ்மா அவர்கள் தலைமையில் இன்று (30.07.2017) நடைபெற்றது.

இச்செயற்குழுவிற்கு வருகை தந்த அனைவரையும் மாநில செயலாளர் ஃபர்சானா வரவேற்றார். மாநில துணை தலைவி பாத்திமா கனி தொகுத்து வழங்கினார்.

இச்செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்;

ஜனநாயக வழியில் போராடும் பெண்களை ஒடுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள்;

மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், தொடர்ந்து போராடுபவர்களையும் குறிவைத்து அரசுகள் காவல்துறையை ஏவி குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை பயன்படுத்தி கைது செய்யும் செயல் தமிழகத்தில் தொடர்கிறது.

சேலத்தில் வளர்மதி என்ற மாணவி, விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் பாதுகாக்க கதிராமங்கலம், நெடுவாசலில் தன்னெழுச்சியாக போராட்டத்திற்கு முன் வந்த பெண்கள் உள்ளிட்ட பலரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கைது செய்வது போன்ற செயல்கள் தொடர்வதை மத்திய, மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் அரசுகளுக்கு எச்சரிக்கிறது.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு - பெண்கள் குழந்தைகள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு;

மத்திய பாஜக அரசின் ஒரே தேசம், ஒரே வரி என்ற கொள்கை முறை அவசர கதியில் கொண்டுவரப்பட்டு சாமானிய மக்களின் மீது வரி சுமத்தி பெருமுதலாளி நலன் சார்ந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு 18 சதவீதம் வரியும் குழந்தைகளுக்கு தினசரி பயன்படுத்தும் பிஸ்கட், டயாபர் போன்ற பொருட்களுக்கு 12 சதவீதம் வரியும் விதித்து விலை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த வரி விதிப்பை பெரும்பான்மையான பெண்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் மத்திய அரசுக்கு எதிரான குரலை எழுப்ப தொடங்கியுள்ளனர்.

எனவே, குழந்தைகள் மற்றும் பெண்களை பாதிக்கும் இந்த வரி விதிப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

விமன் இந்தியா மூவ்மெண்ட்(விம்) மகளிர் அமைப்பின் தீவிர உறுப்பினர் சேர்க்கை;

விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் சார்பாக வரும் செப்டம்பர் 01 முதல் 30 வரை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. சமூக மாற்றமும், ஆட்சி மாற்றமும் பெண்களின்றி சாத்தியமில்லை, பெண்களுக்கான அரசியல் மாற்றம் என்பது தூய்மையானதாகவும், அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற உண்ணத நோக்கத்தில் தேசிய அளவில் அனைத்து மக்களையும் ஒன்றினைத்து உருவாக்கப்பட்டதுதான் விமன் இந்தியா மூவ்மெண்ட் என்ற பெண்கள் அரசியல் அமைப்பு.

இன்று பல்வேறு தளங்களில் அவர்களுக்கான உரிமைகளையும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் தட்டி கேட்பதிலும் உரிய நீதியை பெற்றுத்தருவதிலும் தேசிய அளவில் செயலாற்றி வருகிறது. இது போன்ற நீதியை பெற்றுத்தரும், பெண்களின் உரிமைகளை காத்திடும் விமன் இந்தியா மூவ்மெண்ட் என்ற மகளிர் அரசியல் பேரியத்தில் அனைத்து சமூக மக்களும் இணைந்து செயலாற்ற வரவேண்டுமாய் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக அழைக்கிறேன்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை