மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது, விமன் இந்தியா மூவ்மெண்ட் கண்டனம்

இதுகுறித்து விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில தலைவர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசு கொண்டுவரயிருக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கெதிராகவும், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு எதிராகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வூட்டி போராடி வந்தவர் சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மாணவி வளர்மதி. இந்நிலையில் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையிலான இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடங்கி, நெடுவாசல் போராட்டம், டாஸ்மாக் முற்றுகை போராட்டம், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சிக்கு எதிரான போராட்டங்களில் பெண்கள் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர். தங்கள் தலைமுறையை காக்கவும், சந்ததியை காக்கவும் பெண்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலம் பெண்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகின்றது.

தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எதிர்க்க துணிவில்லாத தமிழக அரசு, தங்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை, பேஷனுக்காக போராடுகிறவர்கள் என்றும், சமூக விரோதிகள், நக்சலைட்டுகள் என்றும் முத்திரை குத்தி தனது இயலாமையை வெளிப்படுத்தி வருகின்றது. பெண்களுக்கு எதிரான தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமீபகாலமாக மக்கள் நலனுக்காக போராடுபவர்களை காவல்துறை மூலம் மிரட்டும் தமிழக அரசு, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகித்து சிறையில் அடைத்து அடக்குமுறையை கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது மாணவி வளர்மதி மீதும் குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போராட்டக்களங்களில் நிற்கும் பெண்களுக்கு தமிழக அரசு மறைமுகமாக மிரட்டலை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை விமன் இந்தியா மூவ்மெண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

மாணவி வளர்மதி மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதோடு, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை