மகளிர் செய்திகள்

முத்தலாக் சட்ட மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது!முஸ்லிம் பெண்கள் நலனுக்கு முற்றிலும் புறம்பானது! - விமன் இந்தியா மூவ்மெண்ட் கண்டனம்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சியின் மகளிர் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பகுதி கிளை சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மற்றும் SDPI கட்சி இணைந்து டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட தலைவி நசீமா பானு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது மைதீன், SDTU தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் சேக் தாவுது உள்ளிட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.
மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்கிட கோரியும் கோவை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் (மகளிர் அமைப்பு) சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கண்டன முழக்கமிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தனர்.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் (SDPI கட்சியின் மகளிர் அமைப்பு) சார்பாக மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் மதுரை மாவட்ட தலைவி கதிஜா பேகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிஜா தலைமையில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நஸ்ரத் பானு மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட விம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! வலியுடன் இரத்தம் வழியும் இந்தியா மாபெரும் மக்கள் பரப்புரையின் பெண்கள் கருத்தரங்கம் கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட தலைவி நஸிமா பானு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விம் அமைப்பின் மாவட்ட செயலாளர் பெளஜிகா பேகம் கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவர்களையும் வரவேற்றார்.
71வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட விமன் இந்தியா மூவ்மென்ட் WIM சார்பாக பரவிவரும் விசக்காய்ச்சலை தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் WIM மகளிர் அமைப்பின் மாநில செயலாளர் பர்சானா, கோவை மாவட்ட தலைவர் ஃபரிதா, துணை தலைவர் மைமூனா, பொருளாளர் சிராஜ் நிஷா, மாவட்ட கமிட்டி உறுப்பினர் ஃபாரிஷா SDPI கட்சியின் கோவை மண்டல தலைவர் முஸ்தபா, சிங்கை தொகுதி தலைவர் அணீஃபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விமன் இந்தியா மூமன்ட் (WIM) நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையில் மேலப்பாளயத்தில் நடைபெற்றது.
SDPI கட்சியின் மகளிர் அமைப்பான விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட்(WIM) சார்பாக மேலப்பாளையத்தில் இரண்டு நாட்கள் பெய்த மழையால் நீர் ஓடையாக தேங்கி நிற்கும் பகுதிகளை செய்ய வேண்டியும், குடிநீர் உடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும், உப்பு தண்ணீர் குழாய் சரி செய்திட வேண்டியும் மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது அலி பாத்திமா தலைமையில் மேலப்பாளையம் மாநகராட்சியில் ஹாமிம்புரம் 6ம் தெரு மக்கள் மாநகராட்சியில் மனு அளித்தனர்.
SDPI கட்சியின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மகளிர் அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மதுரையில் WIM அமைப்பின் மாநில தலைவி நஜ்மா அவர்கள் தலைமையில் இன்று (30.07.2017) நடைபெற்றது. இச்செயற்குழுவிற்கு வருகை தந்த அனைவரையும் மாநில செயலாளர் ஃபர்சானா வரவேற்றார். மாநில துணை தலைவி பாத்திமா கனி தொகுத்து வழங்கினார். இச்செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்; ஜனநாயக வழியில் போராடும் பெண்களை ஒடுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள்; மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், தொடர்ந்து போராடுபவர்களையும் குறிவைத்து அரசுகள் காவல்துறையை ஏவி குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை பயன்படுத்தி கைது செய்யும் செயல் தமிழகத்தில் தொடர்கிறது. சேலத்தில் வளர்மதி என்ற மாணவி, விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் பாதுகாக்க கதிராமங்கலம், நெடுவாசலில் தன்னெழுச்சியாக போராட்டத்திற்கு முன் வந்த பெண்கள் உள்ளிட்ட பலரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கைது செய்வது போன்ற செயல்கள் தொடர்வதை மத்திய, மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் அரசுகளுக்கு எச்சரிக்கிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு - பெண்கள் குழந்தைகள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு; மத்திய பாஜக அரசின் ஒரே தேசம், ஒரே வரி என்ற கொள்கை முறை அவசர கதியில் கொண்டுவரப்பட்டு சாமானிய மக்களின் மீது வரி சுமத்தி பெருமுதலாளி நலன் சார்ந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு 18 சதவீதம் வரியும் குழந்தைகளுக்கு தினசரி பயன்படுத்தும் பிஸ்கட், டயாபர் போன்ற பொருட்களுக்கு 12 சதவீதம் வரியும் விதித்து விலை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த வரி விதிப்பை பெரும்பான்மையான பெண்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் மத்திய அரசுக்கு எதிரான குரலை எழுப்ப தொடங்கியுள்ளனர். எனவே, குழந்தைகள் மற்றும் பெண்களை பாதிக்கும் இந்த வரி விதிப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. விமன் இந்தியா மூவ்மெண்ட்(விம்) மகளிர் அமைப்பின் தீவிர உறுப்பினர் சேர்க்கை; விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் சார்பாக வரும் செப்டம்பர் 01 முதல் 30 வரை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. சமூக மாற்றமும், ஆட்சி மாற்றமும் பெண்களின்றி சாத்தியமில்லை, பெண்களுக்கான அரசியல் மாற்றம் என்பது தூய்மையானதாகவும், அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற உண்ணத நோக்கத்தில் தேசிய அளவில் அனைத்து மக்களையும் ஒன்றினைத்து உருவாக்கப்பட்டதுதான் விமன் இந்தியா மூவ்மெண்ட் என்ற பெண்கள் அரசியல் அமைப்பு. இன்று பல்வேறு தளங்களில் அவர்களுக்கான உரிமைகளையும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் தட்டி கேட்பதிலும் உரிய நீதியை பெற்றுத்தருவதிலும் தேசிய அளவில் செயலாற்றி வருகிறது. இது போன்ற நீதியை பெற்றுத்தரும், பெண்களின் உரிமைகளை காத்திடும் விமன் இந்தியா மூவ்மெண்ட் என்ற மகளிர் அரசியல் பேரியத்தில் அனைத்து சமூக மக்களும் இணைந்து செயலாற்ற வரவேண்டுமாய் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக அழைக்கிறேன்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை