SDPI கட்சி வர்த்தகர் அணி மாநில தலைவரின் வணிகர் தின வாழ்த்துச் செய்தி

எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தக அணி மாநிலத் தலைவர் முகைதீன் இன்று வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

நாடு முழுவதும் வணிகர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய சூழலில் இந்தியாவில் உள்ள அனைத்து வணிகர்களின் நலன்களும் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் சில்லரை வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து வணிகர்களும் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது சில்லறை வணிகம்தான். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதன் மூலம் ஆன்லைன் வணிகம் போன்றவைகள் மிக வேகமாக செயல்பட துவங்கியுள்ளன. இதனால் நமது நாட்டில் கோடிக்கணக்கான சில்லரை வணிகர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். நாட்டில் விவசாயம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருவது போல் சில்லரை வர்த்தகமும் அழிக்கப்பட்டு வருகிறது. இது நமது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை