நவம்பர் 28 பாரத் பந்த் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் -  மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற ”பாரத் பந்தில்” பிச்சை எடுத்து போராட்டத்தை வலுப்படுத்தியது SDPI.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பொருத்தமற்ற, சாதுரியமற்ற திட்டத்தால் மிகக் கொடுமையான சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சாதாரண அடித்தட்டு மக்கள் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.


இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து SDPI கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சியின் கோவைமாவட்ட வர்த்தகர் அணியின் சார்பாக நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்,மோடியின் சாதுரியமற்ற செயலால் மக்கள் நடு ரோட்டில் பிச்சை எடுப்பது போல போராட்டத்தை வலுப்படுத்தியது SDPI கட்சி
இதனால் அங்கு போலீசாருக்கும் SDPI கட்சியின் தொண்டர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணிமாநில துணை செயலாளர் கோவை கறீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான எஸ்.டி.பி.ஐ. தொண்டர்கள் பங்கெடுத்து மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிரான கோஷங்களை முன்னிறுத்தினர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை