வாகன தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நெல்லையில் SDTU ஆர்ப்பாட்டம்

சோஷியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) தொழிற்சங்கத்தின் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பாக, 05/02/2017 அன்று, மேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து, வாகன தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,


ஆர்ப்பாட்டத்திற்கு SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எ ஹைதர் அலி தலைமை வகித்தார். SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் அபூபக்கர் தொகுப்புரையாற்றினார். SDPI கட்சியின் மாவட்ட தலைவர் கே.எஸ். ஷாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 200 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் SDTU மேலப்பாளையம் பஜார் வேன் சங்க நிர்வாகிகள் அய்யூப் கான், செல்லத்துரை, பஜார் ஆட்டோ சங்க நிர்வாகிகள் முருகன், இஸ்மாயில் மற்றும் மேலப்பாளையம் அனைத்து SDTU சங்க நிர்வாகிகள் உள்பட திரளான வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
1. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை உயரத்த கூடாது.
2. வாகன உரிமம் புதுப்பித்தலுக்கான (F.C.) கட்டணத்தை 300% உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும்.
3. வாகன உரிமம் புதுப்பித்தலுக்கான தேதி முடிந்த வாகனங்களுக்கு அபராதமாக நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற முறையை விட்டுவிட்டு ஏற்கனவே உள்ள மாதம் 50 ரூபாய் என்ற நடைமுறையை பின்பற்று.
4. பதிவு சான்று & வாகன அனுமதி சான்று உள்ளிட்ட கட்டண உயர்வை திரும்பப்பெறு.
5. பெட்ரோல் டீசல் விலையை குறைத்திடு.
6. வாகன காப்பீட்டு உயர்வை திரும்பப்பெறு.
7. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்றிடு.
8. நெல்லை மாநகர காவல்துறை புதிய ஆட்டோ சங்கங்கள் அமைப்பதற்கு கெடுபிடி செய்யக் கூடாது.
இறுதியாக EB.ஜாபர் நன்றி கூறினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை