தொழிலாளர் உரிமை மீட்பு மாவட்ட மாநாடு

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் SDPI கட்சியின் தொழிற்சங்க பிரிவான SDTU தொழிற்சங்கம் சார்பாக 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர் உரிமை மீட்பு மாவட்ட மாநாடு ஜனவரி 07 அன்று நடைபெற்றது

இம்மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரத்திஸ் முகம்மது அலி மாநாட்டிற்கு வருகை தந்த அனைவர்களையும் வரவேற்றார்.

SDTU தொழிற்சங்க மாநில பொருளாளர் கார்மேகம், நெல்லை மண்டல SDTU தலைவர் ஹக்கீம், SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச் செயலாளர் S.S.A கனி, SDTU தொழிற்சங்க நிர்வாகிகள் கல்வத், இஸ்மாயில், பஷீர் லால், ஜாபர் சாதிக் ஆகியோர் மாநாட்டிற்கு முன்னிலை வகித்தனர்.

இம்மாநாட்டில் SDTU தொழிற்சங்க மாநில தலைவர் தஞ்சை A.முஹம்மத் ஃபாருக், பொதுச் செயலாளர் U.P. அஜித் ரஹ்மான், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் மா. பிரிட்டோ, சி.மா பிரித்விராஜ்(திருப்பூர் மக்கள் அமைப்பு), SDPI கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முஹம்மது முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினர்.

 மேலும் இந்த மாநாட்டில் கீழ்கண்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானங்கள்

  1. அரசுகள் பெட்ரோல், டீசல் விலை நிர்ணைய உரிமையை தனியாரிடமிருந்து உடனே திரும்பப்பெற வேண்டும்.
  2. பீடி தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான மேம்பாட்டிற்கு அரசு நிதியை அதிப்படுத்த வேண்டும்.
  3. மாவட்டம் முழுதும் உள்ள சாலைகளை சீரமைத்து டெண்டர்களை முறைப்படுத்த வேண்டும்.
  4. எழுத, படிக்க தெரிந்த அனைத்து ஓட்டுனர்களுக்கும் பேட்ஜ் வழங்கி, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
  5. அரசு போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
  6. தொழிலாளர்களுக்கு என தனி நிதி ஒதுக்கி எளிமையான முறையில் அரசு வங்கிகளில் கடன் வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.
  7. தரமற்ற சாலைகளுக்கு காரணமான துறைசார்ந்த நிர்வாகிகள் மீது தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  8. நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேருராட்சியில் மாதம் சரியான நாளில் நிரந்தர பணியாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் மேலும் துப்புரவு பணியாளர்கள் சம்பளத்திற்கென பொதுமக்களிடம் கை ஏந்த அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள் என்ற நிலையையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் இறுதியாக மாவட்ட துணை செயலாளர் பஷீர்லால் நன்றி கூறினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை