மின்வாரியத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்; எஸ்.டி.டி.யூ

இது தொடர்பாக எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹம்மது ஃபாரூக் வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான 11,வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றித்தர வேண்டும். மேலும் அரசு அதிகாரிகளுக்கு நிகராக மின்வாரிய தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் படி காலதாமதமான நிலுவைத் தொகையை சேர்த்து தர வேண்டும். 9000 ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக்க வேண்டும் என தமிழக அரசை எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மக்களிடம் எந்தவிதமான கருத்துகளையும் கேட்காமல் மின்சாரத்திற்கான விலையை உயர்த்தி பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தமிழக அரசு குறைந்தபட்சம் உயர்த்தும் தொகையை மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம், துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். ஆனால், அதை விடுத்து தனியாருக்கு சாதகமான திட்டங்களை கையில் எடுத்து அந்த தொகை முழுவதையும் தனியாருக்கு சென்றடைவதை போன்று வழி செய்கிறது தமிழக அரசு. இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 


எனவே, தமிழக அரசு இந்நிலையை கவனத்தில் கொண்டு தனது திட்டங்களை அரசுக்கு சாதகமாக மாற்றி அமைத்தால் தான் சமீபகாலமாக தொழில் வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்து வரும் தமிழகம் மீண்டும் முன்னேற வழி பிறக்கும். மக்களுக்கும் இதன் பலன் சென்றடையும். எனவே, இதற்காக நடத்தப்படும் அனைத்து போராட்டத்தையும் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக அரசு மேலும் கால தாமதம் ஏற்படுத்தாமல் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை