SDTU செய்திகள்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் SDPI கட்சியின் தொழிற்சங்க பிரிவான SDTU தொழிற்சங்கம் சார்பாக 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர் உரிமை மீட்பு மாவட்ட மாநாடு ஜனவரி 07 அன்று நடைபெற்றது
ஈரோடு மாநகரில் CITU, SDTU, LPF உள்ளிட்ட தொழிற்ச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மீட்டர் கட்டன ஆட்டோ சேவை துவக்க விழா நடைபெற்றது.சேவையை போக்குவரத்து காவல் துணை கண்ணாணிப்பாளர் சேகர் துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹம்மது ஃபாரூக் வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான 11,வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றித்தர வேண்டும். மேலும் அரசு அதிகாரிகளுக்கு நிகராக மின்வாரிய தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் படி காலதாமதமான நிலுவைத் தொகையை சேர்த்து தர வேண்டும். 9000 ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக்க வேண்டும் என தமிழக அரசை எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
SDPI கட்சியின் தொழிற்பிரிவான SDTU தொழிற்சங்கத்தின் தென் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று(16.09.2017) சென்னையில் தேசிய பொறுப்பாளர் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கிராம அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் SDPI கட்சியின் தொழிற்சங்கமான SDTU மாநில செயலாளர் அப்துல் காதர் தலைமையில் SDTU நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
கோவை மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் சிட்டி மீட்டர் ஆட்டோ சங்கத்தின் சார்பாக 71வது (15-08-2017) சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
SDTU தொழிறசங்கத்தின் தொடர் போராட்ட முயற்சியால் 8 ஊழியர்களுக்கு சென்னை மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பணி உயர்வு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் இந்த பணி உயர்வுக்கு காரணமாக இருந்த SDPI மற்றும் SDTU தொழிற்சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பணி உயர்வு பெற்ற தொழிலாளர்கள் கட்சியின் மாநில தலைமையகத்திற்கு வருகை புரிந்து கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்களுக்கும், SDTU தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் தஞ்சை முகமது ஃபாரூக் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மே தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் சென்னையில் SDTU தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தின மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மே தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் சென்னையில் SDTU தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தின மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,வாகன காப்பீடு ,ஓட்டுனர் உரிமம் ,வாகன புதுப்பித்தல் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து SDTU தொழிற்சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் PT. சாமுவேல் பால் அவர்களின் தலைமையில் தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
8/01/2017 காலை 11 மணியளவில் காஞ்சி மாவட்ட SDTU தொழிற்சங்கம் நடத்தும் RTO அலுவலக முற்றுகை போராட்டம்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை