வழக்கறிஞர் செய்திகள்

SDPI கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(ஜன.14) மதுரையில் உள்ள அண்ணபூர்ணா ஹோட்டலில் வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் வழக்கறிஞர். அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளார் வழக்கறிஞர் சுலைமான் பாட்ஷா பொதுக்குழுவிற்கு வருகை தந்த அனைத்து வழக்கறிஞர்களையும் வரவேற்றார்.
திருவள்ளூர் மாவட்டம் ஐக்கிய ஜமாத் சார்பில் ஜமாத் நிர்வாகிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜா முஹம்மது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஷரீஅத் சட்டமும், இந்திய நீதி மன்றங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்ட SDPI கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் வழக்கறிஞர்களுக்கான சட்ட கருத்தரங்கம் நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள லாரா பாரடைஸ் மஹாலில் நடைபெற்றது.
SDPI கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் 24.09.2017 அன்று சென்னையில் மாநில தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி அவர்கள் கலந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்
எஸ்.டி.பி.ஐ. கட்சி வழக்கறிஞர் அணி சார்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (செப்.23) சட்டக்கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் வழக்கறிஞர் எம்.அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் வழக்கறிஞர் சுலைமான் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, என்.சி.ஹெச்.ஆர்.ஓ. மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி.பா.மோகன், எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜா முகமது ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாக வழக்கறிஞர் அணியின் சென்னை மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது அலி நன்றியுரையாற்றினார்.
வழிபாட்டு தளங்களில் ஒலி பெருக்கி அகற்ற காவல்துறை கெடுபிடி கொடுத்துவரும் நிலையில் SDPI கட்சி மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள் சட்டவிழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது! இந்நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான ஷாஜஹான் அவர்கள் சட்டரீதியான வழிமுறகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
SDPI கட்சி வேலூர் மாவட்டம் வழக்கறிஞர் அணி சார்பாக இன்று நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட தலைவர் ஆசாத் தலைமையில் நடைபெற்றது.
SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மத்திய பேருந்து நிலையம் T-10 ஹோட்டலில் வழக்கறிஞர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை